ஐபிஎல் || மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பும் வேக பந்துவீச்சாளர்! ஜடேஜாவை தந்து வாங்க முடிவு! - Seithipunal
Seithipunal


2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் மற்றும் வீரர்கள் டிரேடிங் குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் தங்களின் வீரர்களின் பட்டியலை தயார் செய்ய துவங்கியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர், சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியின் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

பின்னர் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை சமாதானம் செய்ய முயற்சித்தும் வேறு அணிக்கு செல்வதாக தெரிவித்ததை அடுத்து அவரை டிரேடிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஷர்துல் தாகூரை விடுவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்து ஷர்துல் தாகூரை மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK trade ravindra jadeja to Delhi capitals


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->