சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளைக் காண அணி நிர்வாகம் செய்த சிறப்பு ஏற்பாடு.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முதல் ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. 

நடுப்பாண்டி ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் ஜியோ சினிமா செயலியில் பார்ப்பதற்கு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

அந்த வகையில் வடபழனி, சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ரயில்நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியை காண 1 மணி நேரத்துக்கு ரூ.10 வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK telecast IPL matches in metro station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->