இந்தியாவில் 75 நகரங்களை கடந்து 44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. 

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மேம்பாலங்களுக்கு செஸ்பலகை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. இந்தியாவில் 75 நகரங்களை கடந்து மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னையை வலம் வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chess Olympiad Jyoti Reaches in mahabalipuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->