சேப்பாக்கம் மைதானத்தில் ‘கலைஞர் கேலரி’.. முதல்வர் ஸ்டாலின் திறப்பு.. எம்.எஸ் தோனி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட பெவிலியன்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கடந்த 1916 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 35 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மேல் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மைதானத்தில் 500 பேர் உட்காரக்கூடிய வகையில் புதிய பெவிலியர் மற்றும் மேல் தளத்தை அமைக்கும் பணியில் மைதானத்தின் நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் புதிய பெவிலியன் திறந்து வைக்கும் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள கேலரிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chepauk stadium New gallery name Karunanidhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->