இன்று பிசிசிஐ-யின் பொதுக்குழு கூட்டம்.. புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) 91 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்‌. இதில் பிசிசிஐ தலைவராக பதிவு வகித்த கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்க கோரினார். 

ஆனால் அவருக்கு ஐபிஎல் கமிட்டி தலைவர் வழங்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்து தற்போது பெங்கால் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தற்போது பிசிசி-யின் புதிய தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்படுகிறார்.  மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வாகிறார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதியாக யார் போட்டியிடுவார்? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு இந்தியா தரப்பிலிருந்து யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. 

இதனிடையே ஐசிஐசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI's general committee meeting today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->