டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று.. ரத்தாகுமா ஐபிஎல் கிரிக்கெட்.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அருகிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஐபிஎல் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டு பின் செப்டம்பரில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another Delhi capitals player affected covid positive


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->