ஐபிஎல் தொடருக்கான.. அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர். 

இதையடுத்து, லக்னோ, அகமதாபாத் அணிகள் இரண்டு உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், லக்னோ, அகமதாபாத் அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாகியது. அதன்படி, அகமதாபாத் அணியில் ஹார்திக் பாண்ட்யா (கேப்டன்), ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான் இருவரும் தலா 15 கோடிக்கும், சுப்மான் கில் 8 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் கேப்டனாகவும், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேஎல் ராகுல் 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஹார்டிக் பாண்டியா இடம்பெற்றுள்ள அகமதாபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ahmedabad name Gujarat Titans


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->