INDvsENG : ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து முக்கிய சுழற்பந்து வீச்சாளர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம் பெற்றிருந்தார்.
 
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அடில் ரஷித் இருந்து விலகியுள்ளார். அடில் ரஷித் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதால் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இஸ்லாமியர்களின் புனிதத் தலம் மெக்கா, சவுதியில் உள்ளது. ஒரு முறையாவது மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் விரும்புவார்கள். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹஜ் புனித யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு  ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடில் ரஷித் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொள்ள  முடிவெடுத்துள்ளார். அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஜூலை 7ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடியும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adil rashid to miss india white ball series


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->