நாளை வைகாசி மாத சிவராத்திரி... விரதத்தின் முழு பலனை அடைய இதை செய்ய மறக்காதீர்கள்.! - Seithipunal
Seithipunal


வைகாசி மாத சிவராத்திரி...!!

சிவராத்திரி என்பது சிவனுக்கு மிகவும் உகந்த இரவு என்று கூறுவார்கள்.

சிவராத்திரியில் ஐந்து வகை உள்ளது அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி.

இந்த மாத சிவராத்திரி, தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவபக்தர்கள் விரதம் இருந்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை வழிபடுவார்கள். 

அதுமட்டும் இல்லாமல் வைகாசி மாதத்தில் வரும் சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.

எனவே, இந்த வருடம் மே 28ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வரும் வைகாசி மாத சிவராத்திரியன்று விரதமிருந்து வழிபடுங்கள்.

மாத சிவராத்திரி :

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

சிவராத்திரி வழிபாட்டின் மகிமைகள் :

சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

சிவராத்திரியன்று 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவ பூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் 'சிவ சிவ" என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tommorrow madha sivarathini special in tmail


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->