மோகினி அலங்காரத்தில் சென்னகேசவர்..அந்தராளம் சுதநாசி.. அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள பேளூர் என்னும் ஊரில் அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சிக்மக;ரில் இருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் பே;ர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் உள்ளது. பே;ரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்குள்ள மூலவர் நின்றகோலத்தில் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது தனி சிறப்பு. 

சென்னகேசவரின் நெற்றியில் உள்ள ஸ்ரீசூர்ணம் செந்நிறத்தில் காட்சி தருகிறது. முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. இவர் மூக்குத்தியும், பாதத்தில் சதங்கையும், கொலுசும் அணிந்திருக்கிறார்.

சங்கு, சக்கரம் இரண்டையும் மேல் இரு கைகள் தாங்கி நிற்கின்றன. வலக்கரத்தில் திருமகள் போல தாமரையையும், இடக்கரத்தில் கதாயுதத்தையும் தாங்கி நிற்கிறார்.

மூலவரின் பின்புறத்தில் பெருமாள் பாதம் உள்ளது. இவர் சன்னதியின் முன் இருக்கும் நவரங்க மண்டபத்தை 'அந்தராளம் சுதநாசி" என்கின்றனர்.

கோபுரத்தைத் தாண்டிச் செல்லும்போது, கருடாழ்வார் சிறகை விரித்தபடி நின்றகோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

யானை, குதிரை வீரர்கள், நடன மாதர்கள் என்று சன்னதியின் பக்கச் சுவர்கள் முழுவதும் கலைநயம் மிக்க சிற்பங்கள் இடைவிடாமல் ஏழு வரிசையில் அமைந்துள்ளன.

தசாவதாரக் காட்சிகள், சிவனின் கஜ சம்ஹாரக்கோலம், லட்சுமி நாராயணர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி, இரண்யவதம் செய்யும் உக்ரநரசிம்மர் ஆகியோர் சிற்பங்கள் இங்கு உள்ளன.

இக்கோயிலில் கட்பே சென்னகேசவர், வேணுகோபாலர், வீரநாராயணர், ஆண்டாள் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

கட்பே சென்னகேசவர் சிலை செய்யும் போது தேரை ஒன்று கல்லில் இருந்து வெளிவந்ததால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது. கட்பே என்றால் தேரை என்றும், கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்றும் பொருள்.

இக்கோயில் கோபுர கலசத்தைக் காண்பதால் சாபவிமோசனமும், சென்னகேசவரின் பாதத்தைத் தரிசிப்பதால் பாவவிமோசனமும் உண்டாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கோகுலாஷ்டமி ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சென்னகேசவரை வேண்டிக் கொள்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special chennakesavar temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->