வளரும் விநாயகர் சிலை.. சிவன் மற்றும் பார்வதியின் கைலாயக் காட்சி.. அருள்மிகு ஆனேகுட்டே விநாயகர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் அருள்மிகு ஆனேகுட்டே விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் கும்பாசி என்னும் ஊர் அமைந்துள்ளது. கும்பாசியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலமானது சமஸ்கிருதத்தில் கஜகிரி என்றும், கன்னடத்தில் ஆனேகுட்டே என்றும் வழங்கப்படுகிறது. 

ஆனே என்றால் யானை, குட்டே என்றால் குன்று, அதனால் இந்த இடத்திற்கு ஆனே குட்டே என்று பெயர் வந்தது. 

யானை முகத்துடன் நின்ற நிலையில் ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரத்துடன் ஒரே கல்லில் (யானை ரூபத்தில்) காட்சியளிக்கிறார். 

இங்கு அமைந்துள்ள விநாயகருக்கு திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது.

வரம் தரும் வரஹஸ்தம், சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தம் என இங்கு அமைந்துள்ள விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படும். இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது. 

வேறென்ன சிறப்பு?

இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்கள் உண்டு. 

இக்கோயிலின் வாசலில் சிவன் மற்றும் பார்வதியின் கைலாயக் காட்சியை தரிசிக்கலாம்.

பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்க கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special Anakutte vinayagar temple


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->