ராசி மாறிய சூரியன்.. இந்த 3 ராசிக்கு இனி பொற்காலம் தான்.! உங்க ராசி இருக்கா.?! - Seithipunal
Seithipunal


சூரியன் செப்டம்பர் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு பிரவேசம் செய்துள்ளார். இதன் தாக்கத்தால் அனைத்து ராசிகளின் நிலை எப்படி இருக்கும்? இந்த ராசி மாற்றத்தின் காரணமாக பயன்பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம். 

ரிஷபராசி:

சூரியன் கன்னி ராசியில் நுழையும் காரணத்தால் கன்னி ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகி இருக்கின்றது. ஆதித்ய யோகத்தால் ரிஷப ராசிக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். 

அத்துடன் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பணம் குறித்த பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஒருவேளை வேறு வேலைக்கு மாற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், இது சரியான சந்தர்ப்பம். உங்களது நிதிநிலை மேம்படும். ஏதாவது புதிய வேலை, புதிய தொழில் துவங்க நினைத்தால் இது சாதகமான நேரம். 

Dailyhunt

கன்னிராசி:

கன்னி ராசிக்கு சிறப்பான காலகட்டமாக இது இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மற்றவர்களுக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல் திறன் மேம்படும். இதன் காரணமாக முன்பை விட பொருளாதார நிலை மேம்படக்கூடும். வேலை விஷயமாக வெளிநாடுகளுக்கு செல்லலாம். 

கடின உழைப்பு காரணமாக பெரும் பலனை அடையலாம். பண வரவு தடைப்பட்டு இருந்தால் இப்பொழுது அதை கிடைக்கும். புதிய வேலை செய்ய நினைத்தால், முயற்சி செய்ய சரியான காலம் இது. 

மீனராசி:

மீன ராசி தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். உத்தியோகம், தொழில் போன்றவற்றில் பெரும் புகழும் பணமும் அதிகமாக கிடைக்கும். 

முன்பை விட உழைப்பிற்கான பலனை இந்த காலகட்டத்தில் அதிகமாக பெற முடியும். உங்களது துறையில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க செய்யக்கூடிய காலம் இது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suriyan in kannirasi palankal 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->