பொறுமையும், புத்துணர்ச்சியும் கொண்ட ராசிக்கு அதிசார சனிப்பெயர்ச்சி பலன்கள்.!   - Seithipunal
Seithipunal


ரிஷப ராசி:

ரிஷப ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் அதிசார பெயர்ச்சியின் காரணமாக பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

சனி பார்வை படும் ராசிகள் :

சனி தான் நின்ற ராசியிலிருந்து,

மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான அயன சயன ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான சுக ஸ்தானத்தையும்,

பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

பலன்கள் :

முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் மற்றும் தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உழைப்பும், பொறுப்புகளும் அதிகரிக்கும். 

நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளையும், பயனற்ற கருத்து வேறுபாடுகளையும் குறைக்க இயலும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்கு உண்டான பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்ல மதிப்பெண்களைப் பெற வழிவகுக்கும். பழைய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விவசாய பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப பயிர்களை தேர்வு செய்வது நல்ல முன்னேற்றத்தை உருவாக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளிலும் குறைவில்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்துவது உங்களின் மீதான நம்பிக்கையையும், பொருளாதார மேன்மையையும் உருவாக்கும்.

உங்களின் மீது அவ்வப்போது அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sanipeyarchi palankal for rishaba rasi 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->