அந்தரத்தில் தொங்கும் அதிசய தூண் - எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீரபத்ரர் திருக்கோயில் உள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரருக்காக விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோயில் தான் இது. 

இந்தக் கோயிலில், ஒரே கல்லை பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிவன் சிலையும், பெரிய நந்தி சிலையும் தான் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் 70 தூண்கள் உள்ள நிலையில் அதில் ஒரே ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்குவது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தூணை மட்டும் அதிசயமாக பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தத் தூணின் அடியில் பேப்பர் மற்றும் துணியை ஒரு பக்கம் செலுத்தி அடுத்த பக்கமாக எடுத்தால் குடும்பத்தில் பொருளாதாரம் மேம்பாடு அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஆகாயத்தூண் என்று அழைக்கப்படும் இந்த அதிசய தூணை ஒரு பிரிட்டிஷ் இன்ஜினியர் ஒருவர் தூண் எப்படி இவ்வாறு அந்தரத்தில் தொங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரால் காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. 

இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் ஒற்றைக் கல்லால் செதுக்கிய சிவன் சிலையும், 30 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட நந்தி சிலையும், அந்திரத்தில் தொங்கும் தூணும் அந்த காலகட்டத்தில் எப்படி கட்டி இருப்பார்கள் என்பது குறித்து தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira veerabathrar sami temple special


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->