வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றலாமா? அவ்வாறு ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.!  - Seithipunal
Seithipunal


பலரும் தங்களது வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றும் பழக்கத்தை   வைத்திருப்பார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா என சந்தேகம் பலருக்கும் உண்டு. 

பெண்களால் விளக்கு ஏற்ற முடியாத சூழலில் ஆண்கள் விளக்கு ஏற்றலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் அப்படி விளக்கை ஏற்றும் பொழுது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு பெண்களால் விளக்கேற்ற முடியும் பொழுது கட்டாயமாக பெண்கள் தான் ஏற்ற வேண்டும். அந்த பொறுப்பை ஆண்கள் கையில் எடுக்கக் கூடாது. 

ஆண்கள் விளக்கு ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மேல் சட்டையை அணியாமல் ஆண்கள் விளக்கு ஏற்ற வேண்டும். பனியன் கூட போடக்கூடாது. 

பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக் கூடாதோ அது போல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்ற கூடாது. 

ஆண்கள் விளக்கேற்றும்பொழுது நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்களது மார்பிலும் பூசிக்கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி தனியாக இருக்கும். 

ஒரு முறை இந்த விதிமுறைகளை பின்பற்றி தீபமேற்றும் பொழுது ஆண்கள் கட்டாயமாக இதை கடைபிடிப்பார்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.

இதே போல் ஆண்கள் குளித்தவுடன் பூஜை அறைக்க சென்று தீபம் ஏற்றக்கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்களும் குளிர வைக்க கூடாது. தீபம் தானாக குளிர்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aangal vilakku etrum murai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->