எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படக்கூடிய ராசிக்காரர்களே.! 2022 ஆங்கில வருட ராசிபலன்கள் - Seithipunal
Seithipunal


2022ஆம் வருடமானது விருச்சிக ராசி அன்பர்களுக்கு எண்ணங்களில் புத்துணர்ச்சியையும், செயல்பாடுகளில் துரிதத்தையும் உருவாக்கும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது நல்லது. சில நேரங்களில் பேச்சுக்களில் அதிகாரத்தன்மை அதிகரிக்கும்.

பொருளாதாரம் :

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிறு சிறு முதலீடுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், கோபமும் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான ஆசைகள் மனதில் ஏற்படும். தமக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் பேச்சுக்களில் நிதானத்தை கையாளுவது நல்லது. பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை மேற்கொள்வது நல்லது. உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் பொறுப்புகளும், மந்தத்தன்மையும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் நன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சில மாற்றங்களும், விரயங்களும் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் சேமிப்பு மற்றும் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் பெரும்போக்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். வித்தியாசமான சில முயற்சிகளின் மூலம் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். ஆரோக்கியம் மற்றும் பயணம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நன்மைகள் :

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும், சேமிப்பை மேம்படுத்துவதற்கான உதவிகளும், மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் காலக்கட்டமாக பிறக்கின்ற புத்தாண்டு அமையும்.

கவனம் :

எண்ணங்களின் போக்கும், உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதும் மற்றும் கவனக்குறைவான செயல்பாடுகளை குறைத்துக் கொள்வதும் நன்மையை ஏற்படுத்தும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 viruchika rasi palankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->