"ஓ இதான் பெஸ்ட் ஃபிரண்டா.?" சிறுமியை காப்பாற்றிய நாய்.. வைரலாகும் வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


நாய் ஒன்று தனது எஜமானரை தந்தையிடமிருந்து காப்பாற்றிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வீட்டில் அமைதியாக படுத்திருக்கும் நாய் திடீரென ஏதோ ஒன்றை உணர்ந்து கொண்டு தன்னுடன் வீட்டில் அமர்ந்து கொண்டு டிவி பார்த்த சிறுமியை எச்சரிக்கிறது. இதனால், உடனே பரபரத்த அந்த சிறுமி தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு எதிரே உள்ள மேஜையில் அமர்ந்து எழுத துங்குகின்றார்.

அவர் எழுத துவங்கியவுடன் அந்த சிறுமியின் தந்தை வீட்டுக் கதவை திறந்து கொண்டு வருகின்றார். தந்தை வரும்போது சிறுமி டிவி பார்ப்பதை தான் நாய் எச்சரிக்கிறது என்பதை தாமதமாக தான் உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும், அந்த தந்தை மீண்டும் தனது அறைக்கு செல்லும் வரை சென்று அவர் போய்விட்டாரா என்பதை பார்த்துவிட்டு வருகின்றது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. சிறுமியை எச்சரித்து அந்த நாய் சிறந்த தோழனாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நாய்களுக்கு அறிவு வளர்ச்சி அதிகம் என்பது உண்மைதான் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog Help To a Fog video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->