100 பேருக்கு ஒரு ஆசிரியர் தான்.. "கல்வி எப்படி கிடைக்கும் தெய்வமே..?".. நெடிசனுக்கு கடலூர் ஆட்சியர் செம ரெஸ்பான்ஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 16ஆம் தேதி பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அருண் அசோக் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பு கடலூர் மாவட்டம் தங்கராஜ் நகர் அரசு பள்ளியில் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் "#கடலூர் தங்கராஜ் அரசு பள்ளி, 100 மாணவர்கள் இருக்கும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இப்படி இருந்தால் மாணவர்களுக்கு கல்வி எப்படி கிடைக்கும்? 

கடலூர் மாவட்டம் பள்ளிக்கல்வி தேர்ச்சி பின் தங்க முதல் காரணம் இதுதான். பொதுமக்கள் ஆதங்கம்" என வடிவேல் காமெடி டெம்ப்லேட் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பார்த்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அதை மனுவாக ஏற்றுக் கொண்டு அதற்கான மனு எண்ணை ஒதுக்கியதோடு சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அந்த பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில் "தங்களின் (Twitter-Pallavas- ) கோரிக்கை மனுவானது (மனு எண் CUD240620231137TW0120 ) சம்பந்தப்பட்ட CEO CUD (73730 02591)அவர்களுகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பதில் அளித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore District Collector response to Netizens question on teacher shortage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->