உயிரோடு துடிதுடிக்க கொளுத்திய மனைவி!! அலறியடித்து உயிரைவிட்ட கணவன்.,செந்துறை அருகே கோர சம்பவம்!!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே மத்துமடக்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (44) என்ற விவசாயிக்கு மஞ்சுளா (40) என்ற மனைவியும், மணிகண்டன்(19) என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். 

மணிகண்டன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். குணசேகரன் மதுவுக்கு அடிமையான குணசேகரன் குடித்து விட்டு தினமும் மத்துமடக்கி கிராமத்தில் உள்ள மக்களை தொந்திரவு செய்து வந்துள்ளார். 

இதனை கண்டித்த அவரது மனைவியையும் அவர் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதே போல் நேற்று மாலை தனது மாமனார் வீடு அமைந்துள்ள செந்துறை அருகே நக்கம்பாடியில் தகராறு செய்துள்ளார். பின்னர் மாமனாரின் வைக்கோல் போரை கொளுத்தியுள்ளார். 

பின்னர் அங்கிருந்து மத்துமடக்கி வந்த குணசேகரன் அங்கேயும் இருந்தவர்களை துன்புறுத்தியுள்ளார். பின்னர் குணசேகரனின் மாமனார் தனது மகளான மஞ்சுளாவிற்கு போன் அவரது தொல்லைகளை பற்றி கூறியுள்ளார். 

அதன் பின்னர் மஞ்சுளாவின் உறவினர்கள் மத்துமடக்கிக்கு கிராமத்திற்கு வந்து மது போதையில் இருந்த குணசேகரனை மஞ்சுளாவுடன் சேர்ந்து சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்து மயக்கமடைந்தார் குணசேகரன். 

குணசேகரன் அசைவற்று கிடந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதை போல காட்ட அவரது உடலில் எண்ணெயை ஊற்றி கொளுத்திவிட்டுள்ளார். 

ஆனால், குணசேகரன் அப்போது உயிரிழக்கவில்லை. எனவே, தீயின் தாக்கத்தால் துடிதுடித்து உயிரை விட்டுள்ளார். பின்னர், அவரை ஊர்க்காரர்கள் தயவில் சுடுகாட்டில் எரிக்க முயன்றுள்ளனர். 

ஆனால், அதற்குள் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குணசேகரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

பின்னர், மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்களை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இது செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

A murder in sendurai mathumadakki


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal