சர்ச்சையில் சிக்கியுள்ள உதயநிதி ஸ்டாலினின் தென் மாவட்ட சுற்றுப்பயணம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இல்லம் தோறும் இளைஞரணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென் மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொழுது தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் ஆதரவாளர்கள் என தனித்தனியாக வரவேற்பு அளித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியது. இதனால் விமான நிலையத்தில் நான்கு அடி உயர கற்சிலை சேதம் அடைந்ததாகவும், அலங்கார செடிகள் பிடுங்கி எரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கேட்டு திமுக தலைமைக்கு தூத்துக்குடி விமான நிலைய தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்று தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் தலைப்பாகை கட்டாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் வழிபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து பல தரப்பட்ட மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தின் போது ஓய்வெடுப்பதற்காக விருந்தினர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகளுக்கும், திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு அடிதடியில் முடிந்தது. இதன் காரணமாக விருந்தினர் மாளிகையில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. 

அதேபோன்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக 500 கொடி கம்பங்கள், பேனர்கள் வைக்க திமுகவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக திமுகவினர் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவமும் திமுக தலைமைக்கு புகாராக செல்லவே கட்சி தலைமை கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்க கூடாது என கண்டித்துள்ளது. 

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதை திமுகவினர் தவிர்த்து உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் எழுச்சிமிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் தென் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. தென் மாவட்ட சுற்றுப்பயணம் உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அவர் அப்செட்டில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalins southern district tour caught in controversy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->