திராவிடர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் திராவிட மாடல் ஆட்சி - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


திராவிடர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் திராவிட மாடல் அரசு என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த இவர், தமிழகம் போதை மாநிலமாக மாறி உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், பெரியவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மது அரக்கனை தாண்டி தற்போது போதைப்பொருள் பழக்கம் தமிழக முழுவதும் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிடர்களான நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஆட்சியாக தான் இது இருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dinakaran speech about Dravidian model


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->