திமுக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும்.

இப்பிரச்னையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசிய கருத்துகளில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறதா?என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.

 தமிழ்நாட்டின் விளைநிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகும். எனவே, எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை தமிழகத்தின் மீது வலிந்து திணிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran says about hydro carbon issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->