திரிபுரா தேர்தல்.. பிரச்சாரம் முடிந்தது.. தலை காட்டாத ராகுல், பிரியங்கா காந்தி.!  - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் நேற்று மாலை 4 மணியோடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை, அங்கு வாக்குபதிவு நடைபெறுகின்றது. 

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் இருக்கின்ற 60 தொகுதிகளில் நாளை சட்டமன்றப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனையடுத்து, அங்கே கடந்த ஒருமாத காலமாக ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி, இடதுசாரி கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டவை  தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் பாஜக சார்பில் இந்திய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. 

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் வருகின்ற மார்ச் 2ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripura election campaign stopped


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->