தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 : பட்ஜெட் உரை நிறைவு.. முழு விவரம் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார்.

அதன்படி, தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்திய நிலை மாற்றப்பட்டுள்ளது. சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது. வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்.  மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவிற்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தையும், தமிழ் சமுதாயம் முதலமைச்சர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது.

நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது. தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதலமைச்சர் திகழ்கிறார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும். சமூக நலத்திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சரிசமமான முக்கியத்துவம். முதலமைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.

அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம்  நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு. காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ரூ.3384 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக பட்ஜெட்டில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ரூ. 10 கோடியில் அமைக்கப்படும்.

உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்குரூ. 1,547 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  புத்தகக் காட்சிகள்,, இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

சமத்துவபுர வீடுகளை சீரமைக்க ரூ. 190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செய்யப்படும். அணைகள் புனரமைப்பு, பாதுகாப்புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ. 7,338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்தாண்டை காட்டிலும் ரூ. 4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ. 1,314 கோடி ஒதுக்கீடு. தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 18218 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ. 293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் அறிவு சார் நகரம் உருவாக்கப்படும்.  உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்படும். 

தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு. அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000  உதவித்தொகை வழங்கப்படும். சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ. 246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ. 5922.40 கோடி ஒதுக்கீடு.  தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ. 82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Full Budget 2020 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->