பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்து வருகிறார்.

அதன்படி, தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ. 7,338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்தாண்டை காட்டிலும் ரூ. 4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ. 1,314 கோடி ஒதுக்கீடு. தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ₨18218 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம் அமைக்கப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget 2020 in PM Housing Scheme


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->