ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த கேஸ்.. பயத்தில் பாஜகவில் பதுங்கும் டிரம்ப்.?! - Seithipunal
Seithipunal


ஆபாச நடிகையுடன் உல்லாசமாக இருந்ததோடு அதை வெளியில் சொல்லாமல் இருக்க பிரச்சார நிதியை லஞ்சமாக கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் இன்று அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் சரணடையலாம் என்று செய்திகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் டொனால்ட் டிரம்பையும் பாரதிய ஜனதா கட்சியையும் கிண்டல் செய்யும் வகையில் மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி  வைரலாக்கி இருக்கிறார் திருநாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹூவா மொய்த்ரா.

பிரச்சார நிதியிலிருந்து ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படலாம் என்ற செய்தி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அமெரிக்க அரசியலில் பெரும்  பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இன்று டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன்  குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை ஷேர் செய்திருக்கும் மஹூவா மொய்த்ரா வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் மெசேஜ் அலர்ட் என குறிப்பிட்டுள்ளார். அதோடு கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க டொனால்ட் ட்ரம்ப் பாஜகவில் இணைகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் பாஜகவின் கொடி அணிந்த சால்வையை போட்டுக்கொண்டு  மோடியை சந்திக்க வருவது போன்ற புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thrinamul congress mp mahua moithra meme went viral on twitter


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->