சனாதன விவகாரம் || "உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்".. காங்கிரஸ் முதல்வர் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா கொசு போன்று ஒழிக்கப்பட வேண்டும் என பேசிய விவகாரம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அவரின் இத்தகைய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த சூழலில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி "சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது. 

அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து கூட்டணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana cm Revanth Reddy says Udayanidhi should be punished in Sanatana issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->