5 பேரில் யாருக்கு சீட்.? முட்டிக்கொள்ளும் காங்கிரஸ் தலைகள்.! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மயிலாடுதுறை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், மகேந்திரன், பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் ஐயரின் மகள் உள்ளிட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அடுத்த கட்ட பட்டியல் இன்று வெளியாக உள்ளது. நிலையில் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்க உள்ளதால் நெல்லை மயிலாடுதுறை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Congress 2nd phase candidate list releasing today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->