#சற்றுமுன்: ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன், முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழிசை.! தொண்டர்கள் சோகம்.!  - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநில ஆளுநராக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். 

தான் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து தமிழிசை சவுந்தரராஜன், "கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்" என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," நான் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. பாரதிய ஜனதா கட்சி, கடுமையான உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷா அவர்களும் நிரூபித்து இருக்கின்றனர். 

 

எனக்கு ஆதரவு தந்து வரும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜகவின் மாநில தலைவராக இருந்த எனக்கு, அதை விட மிகப்பெரிய பதவியை பாஜக தலைமை கொடுத்துள்ளது" என கூறியிருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது, தமிழிசை தற்பொழுது தனது பாஜக தமிழக தலைவர் என்ற பதவியில் இருந்தும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற பதவியில் இருந்தும் விளக்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILISAI RESIGN HER LEADER POST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->