அக்.31ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!! - Seithipunal
Seithipunal


பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் வகையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் கொள்கை ரீதியில் சில முடிவுகள் எடுப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu cabinet meeting on October 31


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->