பாஜகவை அழிக்க வந்த ஸ்லீப்பர் செல் அண்ணாமலை.. போட்டு தாக்கிய எஸ்.வி சேகர்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எஸ்.வி சேகருக்கும் இடையே சமீப காலமாக வார்த்தை போர் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பத்திரிக்கை பேட்டி அளித்த எஸ்.வி சேகர் "பாஜகவை போலீஸ் ஸ்டேஷன் போல நடத்த அண்ணாமலை ஆசைப்படுகிறார். இவர் எல்லாம் நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான். தமிழகத்தில் பாஜகவை அழிக்க வந்த ஸ்லீப்பர் செல். எதிரியின் தலையை சீவாமல் உடன் வருபவர்களின் தலையை சீவினால் கடைசியில் அவர் அரசியல் அனாதையாக தான் இருக்க வேண்டும்.

என்னை பிரச்சாரத்திற்கு கூட கட்சியிலிருந்து அழைப்பதில்லை. இதனால் எனக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. அனைத்து சாதியினருக்கும் தனி கட்சி இருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு என ஒரு தனி கட்சி உருவானால் மகிழ்ச்சியே. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் பாமகவின் வாக்கு சதவீதம் 4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாக சரிந்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் வரை அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நீடிப்பாரா என்பது சந்தேகம்தான். பாஜக மாநில தலைவராக வானதி சீனிவாசன் கூட வரலாம். எனக்கு பதவி ஆசை ஒருபோதும் கிடையாது" என அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sve Shekar criticized tn bjp president Annamalai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->