மம்தா பானர்ஜியுடன் பேசியது என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்லத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கெடுப்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பின் போது அவர்கள் அடுத்ததாக நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் வியூகங்கள் குறித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்தபோது கொல்கத்தா இனிப்பு வகைகளை ஸ்டாலினுக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

இத்தகைய நிலையில், இந்த கலந்துரையாடலின் போது என்ன பேசினோம் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், "மம்தா பானர்ஜியுடன் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. இரண்டு இரு முதல்வர்கள் சந்திக்கும் பொழுது அவரவர் மாநிலங்களின் வளர்ச்சி போன்றவற்றை குறித்து உரையாடுவது சாதாரணம்." என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin about mamata meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->