தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை! நாடாளுமன்றத்தை முடக்கவும் திட்டமா? எகிறி அடிக்கும் சித்தராமையா! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இன்று பகல் 12.30 மணிக்கு சித்தராமையா, டி.கே சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழகத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜக எம்பி பி.சி மோகன் தமிழகத்துக்கு தினமும் 5000 கன அடி நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது" என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேபோன்று காங்கிரஸ், பாஜக, மஜக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என ஒற்றைக் கருத்து தெரிவித்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப் போவதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா "கர்நாடகாவில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் தற்போது இல்லை. இதனை மனுவாக உச்ச நீதிமன்றத்திலும், காவிரி ஒழுங்காற்று மன்றத்திலும் தாக்கல் செய்ய உள்ளோம். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடக மாநில எம்பிக்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah said that there is no water to TamilNadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->