மாடு பிடிபட்டது.. 30,000 கோடி தான் காரணம்.. பி.டி.ஆரை கலாய்த்த செல்லூர் ராஜு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையிலான அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் 30,000 கோடி ரூபாய் தான். தவளை தன் வாயால் கெடும். அதுபோல உண்மையைச் சொல்லி மதுரைக்காரன் மாட்டிக் கொண்டான். 

மாடு பிடிபட்டது, மதுரை பழனிவேல் தியாகராஜன் பிடிபட்டார். அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி விட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் என்பதற்காக ஒரு சாதாரண இலாகாவுக்கு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இளம் அமைச்சராக பதவி வகித்த மனோ தங்கராஜ் வைத்திருந்த இலாகாவை பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழக முதல்வருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பழனிவேல் தியாகராஜன் மீது அதிகப்படியான கோபம் உள்ளது. குறிப்பாக உதயநிதிக்கும் சபரிசனுக்கும் அவர் மேல் கோபம் உள்ளது என்பது அமைச்சரவை மாற்றத்தில் தெரிகிறது, இதுதான் உண்மை" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju criticizes removal of PTR Finance Minister post


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->