அதி பயங்கரவாதிகளிடம் நாடே சிக்கி உள்ளது.. பல்லாங்குழி விளையாடிட்டு இருந்தியா..? சீமான் ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "இந்த நாட்டிற்காக போராடாதவர்கள் எல்லாம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ளனர். இதை மறுத்து தொலைக்காட்சி விவாதங்களில் என்னோடு விவாதம் செய்ய யாராவது தயாராக உள்ளார்களா..? நீங்கள் நடத்திய ஒரு போராட்டத்தை சொல்லுங்கள். சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு முன்பு நாடு விடுதலை ஆவதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ். 

அந்த ஆர் எஸ்.எஸ் இயக்கம் நாட்டின் விடுதலைக்காக செய்த ஒரு போராட்டத்தை கூறுங்கள். இரண்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கோழை சாவர்க்கரை வீரசாவர்க்கர் என மக்கள் மத்தியில் மாபெரும் விடுதலை போராட்ட வீரர் என்று கட்டமைக்கும் வரலாற்று பெரும் துரோகம் இங்கு நடக்கிறது.

இன்று வந்து தேசப்பற்று, நாட்டுப்பற்று, பயங்கரவாதம், தீவிரவாதம் என்று சொல்கிறார்கள். இன்று அதி பயங்கரவாதிகளிடம் நாடே சிக்கி உள்ளது. பயங்கரவாதம் வேறு, தீவிரவாதம் வேறு. ஒரு கருத்தை தீவிரமாக வாதிடுவது, விவாதிப்பது தீவிரவாதம். பயங்கரவாதம் என்பது அந்தக் கருத்தை சொல்பவனே அழித்து ஒழிப்பது. அந்த பயங்கரவாதத்தை செய்து கொண்டிருப்பவர்கள் நீங்கள். 

அதனால் மற்றவர்களுக்கு பயங்கரவாதி பட்டம் கட்டுவதை முதலில் நிறுத்துங்கள். தி கேரளா ஸ்டோரி என்று ஒரு மாநிலத்தின் பெயரில் திரைப்படம் வெளியாகி உள்ளது. அங்கு இருக்கும் 32,000 பெண்களை மதமாற்றி பிற நாடுகளுக்கு அழைத்துச் சென்று தீவிராத பயிற்சியளித்து இந்த நாட்டிற்கு அனுப்பி குழப்பம் செய்வது போல் திரைப்படம் எடுத்துள்ளனர்.

இது திரைப்படம் எடுக்கும் இயக்குனருக்கு தெரிகிறது. உளவுத்துறைக்கு தெரியாதா..? ராணுவ அமைச்சகத்திற்கு தெரியாதா.? தடுக்காமல் என்ன பண்ணிட்டு இருந்தாங்க.? பல்லாங்குழி விளையாடிட்டு இருந்தியா..? கோலிகுண்டு அடிச்சிட்டு இருந்தியா.? பம்பரம் சுத்திட்டு இருந்தியா..? இதையெல்லாம் அனுமதித்துக் கொண்டிருந்தார்களா..? 

இப்படி ஒரு திரைப்படம் வரட்டும் பிறகு பேசுவோம் என அமைதியாக இருந்தார்களா.? மத மாற்றத்தை பற்றி பேச உங்களுக்கு ஏதாவது தகுதி, அருகதை இருக்கிறதா.? நாங்கள் சைவர்கள், வைணவர்கள், பௌத்தத்தை தழுவியவர்கள், சமணத்தை தழுவியவர்கள். எங்களை இந்துவாக மாற்றியவன் எவன்.? சர் வில்லியம் ஜோஸ் கையெழுத்திட்டதால் ஒரே இரவில் எங்களை அனைவரையும் இந்துவாக மாற்றியது யார்.? நீங்கள் மத மாற்றத்தை பற்றி பேசுகிறீர்களா.?" என செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman criticized RSS and BJP in press meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->