சசிகலாவின் அடுத்தகட்ட நிலைப்பாடு.. அதிமுகவில் நடக்கப்போகும் மாற்றம்.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளடித்து. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் அமர உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். 

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 66 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுகவில் போட்டியிட்ட 27 அமைச்சர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே அதிமுகவனின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகரும் பொங்கலூர் மணிகண்டன் கூறியதாவது, சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஆனால், அதிமுகவில் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் தான் சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது இறுதியான முடிவாக தெரியவில்லை. அவர் வந்தாலும், வராவிட்டாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதுள்ள நிலையே நீடிக்கும். 

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுக் கொண்டு சசிக வந்தால் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகவை மீண்டும் கைப்பற்ற நினைத்தால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் எந்த இடத்திலும் சசிகலாவை விமர்சிக்க வில்லை. ஆனால் தற்போது உள்ள சூழலில் சசிகலா எடப்பாடி பழனிசாமியை மனதார பாராட்டுவார் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala next plan for admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->