நேரடியாக களத்தில் இறங்கும் சசிகலா.! முதல் ஆட்டமே இப்படி தான் ஆரம்பிக்குது.!  - Seithipunal
Seithipunal


2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தேர்தலுக்கான பணிகளை ஒவ்வொரு கட்சியும் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், சசிகலாவும் தேர்தல் பணிகளை சிறையில் இருந்தவாறு துவங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைதண்டனை பெற்று வருகிறார் சசிகலா.

இன்னும் ஒன்றரை வருடம் சிறையில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சசிகலாவின் சிறை தண்டனையானது முடிவடைகின்றது. அவர் வெளிவருவதற்குள் 2021 தேர்தல்கள் தேர்தலுக்கான பணிகள் துவங்கி விடும். எனவே, சிறையில் இருந்த வரை கட்சி பணியை நடத்த முடிவு எடுத்திருக்கிறாராம்.

சசிகலா அதன்படி எடப்பாடி பழனிச்சாமியை தான் முதலில் அடிபணிய வைக்க வேண்டும் என்பது முக்கிய திட்டமாக கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பணத்தை இறக்கி அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தன்னுடைய பக்கம் இருக்கக்கூடும். சசிகலா தினகரனை மட்டும் நம்பி அரசியல் செய்ய தயாராக இல்லையாம்.

தனக்கு நெருக்கமான மற்றும் நம்பிக்கையான ஆட்கள் சிலரை இதற்கு பொறுப்பாளராக நியமிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் அதிமுக முக்கிய புள்ளிகளை குறிவைத்து இந்த காய் நகர்த்த படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala new plan about 2021 election


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->