#BREAKING:: நிதியமைச்சராக தொடரும் பி.டி.ஆர்... இலாக்கா மாற்றப்படவில்லை என தகவல்..!! - Seithipunal
Seithipunal


திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரிந்துரை ஏற்று பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சராக டி ஆர் பி ராஜா பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. 

அதேபோன்று அமைச்சர் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோரின் துறைகளும் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை மாற்றியமைக்கப்பட மாட்டாது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் தமிழக அமைச்சரவையில் மற்ற அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்க பட வாய்ப்புள்ளது. 

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நிதித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டு வந்த நிலையில் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதை நம்பத் தகுந்த திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reported that PTR has not been changed from finance minister


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->