அதிகாரப் பசியில் இருக்கிறார் ஆளுநர்.!! ரவுண்ட் கட்டிய முதலமைச்சர்.!! பற்றி எரியும் பஞ்சாப் அரசியல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு அரசியல் நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்சி வரும் நிலையில் பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூலம் மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. 

பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டுவது குறித்து அனுப்பப்பட்ட ஆவணங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காததால் பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கடுமையாக கண்டித்தது.

இந்த நிலையில் தான் பஞ்சாப் மாநில அரசுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு முதல்வர் பகவந்த் மான் பதில் அளிக்கவில்லை என்றால் பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த நேரிடும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த போவதாக மாநிலத்தில் அமைதியை விரும்பும் பஞ்சாப் மாநில மக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிரட்டியுள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 41 கிலோ ஹேராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 753 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய 16 கடிதங்களில் 9 கடிதங்களுக்கு நான் பதில் அளித்து விட்டேன். மீதமுள்ள கடிதங்களுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும். பஞ்சாபின் வளர்ச்சி நிதி பற்றி ஆளுநர் எப்போது கடிதம் எழுதி இருக்கிறாரா.? விவசாயிகள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளாரா? அவர் எப்போதாவது பஞ்சாப் உடன் துணை நின்றுள்ளாரா.? அவரின் அதிகாரப்பசி அவருடைய கடிதத்தில் தெரிகிறது. ராஜஸ்தானில் தேர்தல் வர உள்ளதால் அவர் அங்கு போட்டியிட்டு முதல்வராக விரும்புகிறார்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab CM criticized Punjab Governor as being power hungry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->