சிவகங்கை பேருந்து விபத்தில் பிரமதர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவிப்பு...!
Prime Minister Modi expresses condolences over Sivaganga bus accident and announces relief
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த துயர சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியிலும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,"சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தோரின் துயரத்தில் என் எண்ணங்கள் இணைந்துள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்."மேலும், பிரதமர் மோடியின் தேசிய நிவாரண நிதி மூலம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi expresses condolences over Sivaganga bus accident and announces relief