அதிமுகவை அமலாக்கத்துறை மூலம் பாஜக மிரட்டுகிறதா..?! பாஜக தலைமையில் கூட்டணியா..?!! வைத்தியலிங்கதின் பரபரப்பான பதில்..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவுளருமான வைத்தியலிங்கம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிமுகவை அமலாக்கத்துறை மூலம் பாஜக மிரட்டுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "சிபிஐ, அமலாக்கத்துறை ரைடு எல்லாம் இப்போ வந்தது அல்ல. தொன்று தொட்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் பிரச்சனைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என பதிலளித்தார் 

கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வைத்தியலிங்கம் "கோவை செல்வராஜை தலைமை கழக உறுப்பினர் பதவி வழங்கலாம் என இருந்தோம். அதற்கு முன் அவருக்கு கோவை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அவர் செய்தி தொடர்பாளராக பணியாற்றியதால் மாவட்ட செயலாளர் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. 

அதனால் கோவையை நான்கு மாவட்டங்களாக பிரித்து செயலாளர்களை நியமித்தோம். அதை பார்த்தவுடன் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக சொல்கிறார். எங்களுக்கு வருத்தமாக உள்ளது. அவரை அழைத்து நிச்சயமாக பேசுவோம். அவர் எங்களை விட்டு போக மாட்டார். 

தமிழகத்தில் இருந்து 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்புவோம் என பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வைத்தியலிங்கம் "அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் இருப்பதால் நிச்சயமாக அவருக்கு இரட்டை இலை கிடைக்கும் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெறும். நிச்சயமாக 40 இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு பாஜக தான் தலைமை தாங்கும். அவர்கள் தலைமையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporter Vaithialingam reply on AIADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->