"ஒரே நாடு; ஒரே தேர்தல்".. இபிஎஸ் ஆதரவளித்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு சந்தேகம்..!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையின் அடிப்படையில் ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேசிய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. 

அந்த வகையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேசிய சட்ட ஆணையம் கருத்து தெரிவிக்குமாறு இரண்டு வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது. அதன் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வந்தால் அன்று தான் உண்மையான பொங்கலாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது தெரியவில்லை. தங்களது தரப்பு கருத்துக்களையும் விரைவில் தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பஞ்சாயத்து ராஜ் வரை கருத்து கேட்க வேண்டும் என்றும் அவை அனைத்தையும் கேட்டு நிறைவேற்றுவதற்குள் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலே வந்துவிடும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side suspicion on One nation one election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->