குலுக்கலில் ஓ.பி.எஸ்-க்கு‌ "பலாப்பழம்" சின்னம் ஒதுக்கீடு.!! அப்போ‌ மற்ற ஓ.பி.எஸ்-களுக்கு என்ன சின்னம்.? - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலப்படும் சின்னத்தை ஒதுக்கியுள்ளார் தேர்தல் நடத்தும் அதிகாரி. 

ஓ பன்னீர்செல்வம் தனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குலுக்கல் முறையில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்படுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து ஒபிஎஸ் என்ற பெயரில் 4 பேர் போட்டி, எம்பிஎஸ் என்ற பெயரில் ஒருவர் போட்டி இருக்கிறார்.

தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் உள்ளிட்ட சின்னங்களை முன்னாள் முதல் ஓபிஎஸ் கோரியிருந்த நிலையில் 4 வேட்பாளர்கள் வாளி சின்னம் கேட்டதால் குலுக்கல் முறையில் ஒச்சாத்தேவர் மகனான பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

போட்டி 1 = ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம்

போட்டி 2 = மதுரை திருமங்கலம் வாகைக்குளத்தை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம்

போட்டி 3 = மலையாண்டி மகன் எம்.பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம்

போட்டி 4 = மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS contest jackfruit symbol in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->