ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு... பதற்றத்தில் பழனிச்சாமி அணியினர்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் தேசிய கட்சியாக இருக்கும் பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்திருந்தார். மேலும் ஆதரவு கேட்டு அனைத்து கூட்டணி கட்சிகளையும் சந்திக்க இருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அவர்களை அவரது இல்லத்தில் இன்று 11 மணி அளவில் சந்திக்க உள்ளனர்.

பின்னர் இன்று மாலை 4 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவர்  அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயத்தில் சந்திக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும், தமிழ் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் அவர்களையும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்களையும் சந்திக்க இருக்கின்றனர்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனிச்சாமி அணியினர் கூட்டணி கட்சிகளை சந்திக்காத நிலையில் பன்னீர்செல்வம் முதலாளாக முந்திக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS announcement to meet ADMK alliance parties


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->