அதிமுக உள்கட்சி பிரச்சனை.! தூதுவிடும், ஓ.பி.ரவீந்திரநாத்.. விருப்பம் நிறைவேறுமா.?! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் சமீப காலமாக உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னர் அதிமுக தலைமை நாற்காலி பெரும் ஆட்டம் கண்டுள்ளது. சசிகலா தலைமை தாங்கிய நிலையில், அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருந்து தலைமை தாங்கி வந்தனர். அதிமுகவில் இருந்து தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் பிரிந்து அமமுக கட்சியை துவங்கினர்.

அடுத்ததாக இரட்டை தலைமை பிரச்சனை இருந்து வந்த நிலையில், கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அதன் பின்னர், ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், முதலில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் நீக்கப்பட்டது செல்லாது என்றும், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவை நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்தது. 

இத்தகைய சூழலில் சமீபத்திய செய்தியாளர் பேட்டியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் மகனும் ,அதிமுக எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், "அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சின்னம்மா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் விருப்பமாக இருக்கிறது. அதுதான் என்னுடைய கருத்தும். வரக்கூடிய தேர்தலில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவருமே ஒன்றாக இணைய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opr wishes To Join with ammk sasikala and ttv


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->