நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி.. ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஒடிசாவின் புரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும், தலைநகர் புவனேஸ்வரில் பெருகிவரும் வாகன போக்குவரத்துக்கு நெருக்கடியை சமாளிக்க தலைநகரை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இடம் வலியுறுத்தினேன்.

எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில் வேற யாரையும் சந்திக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர் நிதீஷ் குமார் உடன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற பொது தேர்தலில் மூன்றாம் அணி என்பது உருவாக வாய்ப்பு இல்லை. எந்த ஊரு எதிர்க்கட்சிகளுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் போட்டியிடாது என தெரியவந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சியில் இணைவது குறித்து நவீன் பட்நாயக் எந்த ஒரு உத்திரவாதமும் அளிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha CM Announces Separate Competition in Elections 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->