செயல்படாத முதலமைச்சர் ரங்கசாமி - மல்லிகார்ஜூன கார்கே குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், புதுச்சேரி பிரச்சாரம் செய்ய வந்தார் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் ஏற்படும் செய்யபட்ட பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் செயல்படவில்லை, அவரை மோடியின் அரசும் செயல்படவிடவில்லை. நாம் அனைவரும் இந்தியாவின் ஒருங்கிணைந்து வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கிடைத்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதில் உறுதியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Not worked cm ranjmgasamy malligajuna karkey


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->