வெடித்தது அடுத்த சர்ச்சை.. நிதீஷ் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை நியமிப்பதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசப்போவதில்லை என நிதீஷ் குமார் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனாவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸ் உடன் தொகுதி பங்கேட்டில் முரண்பட்டு உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுக்கே இடமில்லை எனவும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மட்டுமே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், குறைந்தபட்சம் 16 மக்களவைத் தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட உள்ளதாகவும் நிதிஷ் குமார் அறிவித்து இருப்பது இண்டி  கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitishkumar announced No seat sharing with Congress


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->