கர்நாடகா தேர்தலுக்கு வெயிட்டிங்.."ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்".. நிதீஷ் குமார் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு..!!

பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது "கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் தொடங்கியதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை பீகாரில் தொடங்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதித்தால் பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்துவதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். சமீப காலத்தில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை நான் சந்தித்து பேசி உள்ளேன். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitish Kumar planned opposition parties meeting after Karnataka elections


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->