ராம ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு விட்டது.!! நரேந்திர மோடி பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலம் அயோதியில் இன்று பிரம்மண்டமாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "பல ஆண்டுகாலமாக காத்திருப்புகளுக்கு பிறகு ராமர் வந்து விட்டார். இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் இனி ஒரு கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. தேசத்தில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ராமர் பக்தியும், ராம நாமமும் ஒலிக்கும்.

ராமர் கோவில் இந்திய ஒற்றுமைக்கான அடையாளம். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். கடந்த 11 நாட்களில் பல்வேறு மாநிலங்களில் பல மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம், ராமர் நிரந்தமானார் மட்டுமல்ல நித்தியமானவர். நமக்கான வழிகளை காட்டுபவர், ராமர் கோயிலை நிர்மானிக்க வேண்டும் என்ற எண்ணம் நாம் அனைவரின் மனதிலும் இருந்தது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது .

பகவான் ராமர் பிரச்சனைக்குரியவர் அல்ல, அவர் பிரச்சினைகளுக்கான தீர்வாக உள்ளார். இன்றைய இந்தியாவின் கனவுகள் நிறைவேறாது என்ற பேச்சுக்கு இடமில்லை" என பெருமிதத்துடன் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi Pride filled Rama rajyam in India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->